ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள ரசாயனத் தொழிற்சாலையில் மூண்ட தீயை அணைக்க 175க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் மும்முரமாக முயன்று வருகின்றனர்.
இதனால் மெல்பர்ன் நகரைச் சூழ்ந்திருக்கும் கரும்புகைமூட்டம் களைவதற்குச் சில நாட்கள் ஆகலாம் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இந்தக் கட்டடத்தில் இருப்பதால் அங்கு வெடிப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த ரசாயனத் தொழிற்சாலையைச் சுற்றியிருக்கும் கட்டடங்கள் இந்தத் தீயால் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுற்றியுள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

