தென்கொரியாவில் கட்டுக்கடங்காத தீ: மக்கள் ஓட்டம்; தீயணைப்பில் பல்லாயிரம் பேர்

தென்கொரியாவில் கட்டுக்கடங்காத தீ: மக்கள் ஓட்டம்; தீயணைப்பில் பல்லாயிரம் பேர்

2 mins read
1ae14dde-7189-41ce-8c2b-04fbd908cf96
தீயை அணைக்க வந்த வாகனங்களைக் கவசமாகப் பயன்படுத்தி சிலர் உயிர் தப்பினர். படம்: ஏஎஃப்பி -

தென்கொரியாவில் மூண்ட காட்டுத் தீ காரணமாக கிட்டத் தட்ட 2,000 பேர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி ஓடினர். பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவியதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக் கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டனர். நாட்டின் கிழக்கு மாநிலமான காங்வோனில் நேற்று முன்தினம் மாலை பற்றிய தீ சோக்சோ, கேநியுங் ஆகிய நகரங்களுக்கும் பரவியது. தீயணைப்பாளர்கள் எவ்வளவோ போராடியும் நேற்றுக் காலை வரை தீ பரவிய வண்ணம் இருந்தது. 525 ஹெக்டர் நிரப் பரப்பும் 198 வீடுகள், கிட்டங்கி உள்ளிட்ட கட்டடங்களும் தீயில் கருகியதாக அதிகாரிகள் கூறி னர். 2,263 பேர் அவரவர் வீடு களிலிருந்து வெளியேற்றப்பட்டு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதற்காக 52 பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தீயணைப்பாளர் களின் கடுமையான போராட் டத்துக்குப் பிறகு சோக்சோ நகர் தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மற்றொரு நகரிலும் 50 விழுக்காட்டு தீ அணைக்கப் பட்டதாக ஊடகங்கள் குறிப் பிட்டன. தென்கொரியா முழுதும் இருந்து 3,251 தீயணைப்பாளர் களும் 872 தீயணைப்பு வாக னங்களும் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். தலைநகர் சோலில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோசியோங் பகுதியின் சாலை ஓரமாக முதலில் தீப்பற்றி யதாக உள்ளூர் அதிகாரிகள் கூறி னர். அப்பகுதியிலுள்ள மலைத் தொடரைச் சுற்றிலும் காட்டுப் பகுதியில் தீ மளமளவெனப் பரவி எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் பேரிடர் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.