இவ்வாண்டின் முதல் மூன்று மாதங் களில் ஈராயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட் டனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 600 டெங்கி பாதிப்புச் சம்பவங்களே பதிவாகின. டெங்கியால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் மூவர் உயிரிழந்தனர் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார். 2018ல் முதல் மூன்று மாதங்களில் டெங்கியால் ஒருவர் மட்டுமே மாண்டுபோனார். தேசிய டெங்கி தடுப்புப் பிரசாரம் 2019 கம்போங் அட்மிரல்டி சமூக வளாகத்தில் நேற்று தொடங்கி வைக் கப்பட்டது. அதில் பங்கேற்றபோது அமைச்சர் மசகோஸ் இந்தப் புள்ளி விவரங்களைத் தெரிவித்தார். வழக்க மாக, டெங்கி உச்சமாக இருக்கும் ஜூன்-அக்டோபர் மாதங்களில்தான் டெங்கி விழிப்புணர்வுப் பிரசாரம் இடம்பெறும். டெங்கி தடுப்பு நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி வலியுறுத்துவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம். "சிங்கப்பூரில் டெங்கி நீடித்த அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வெப்பநிலை உயர்வு போன்ற கால நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவு கள் இந்நிலையை மேலும் மோசமாக் கும்," என்றார் திரு மசகோஸ். இந்தோனீசியா, மலேசியா உள் ளிட்ட இவ்வட்டார நாடுகளிலும் இவ்வாண்டு டெங்கி பாதிப்பு அதிக மாக இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். கொசுப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் படாவிடில், வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் வரும் மாதங் களில் டெங்கி பாதிப்பு இன்னும் கூடலாம் என எதிர்பார்ப்பதாக தேசிய சுற்றுப்பற வாரியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இப்போது பெண் ஏடிஸ் கொசுக் களையும் அவற்றின் முட்டைகளையும் ஈர்த்துப் பிடிக்கக்கூடிய 'கிராவிடிராப்' எனும் சாதனங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டை களில் வைக்கப்பட்டுள்ளன.
2,000 பேருக்கு டெங்கி பாதிப்பு
2 mins read
கம்போங் அட்மிரல்டி உணவங்காடி நிலையத்தில் பூச்சி விரட்டி, விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய டெங்கி தடுப்புத் தொகுப்பைக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (இடமிருந்து 2வது). உடன் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரின் அமின் (வலமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

