சிங்கப்பூர்-மலேசியா இடையில் விரைவில் பேச்சுவார்த்தை

சிங்கப்பூர்-மலேசியா இடையில் விரைவில் பேச்சுவார்த்தை

2 mins read
b6252c64-39c7-4c58-a905-3574329b829c
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுக்கும் (இடது) அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகம்மது அலிக்கும் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை டாக்டர் மகாதீரும் ஏற்றுக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடல் எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்த பேச்சுவார்த்தையை சிங்கப்பூரும் மலேசியாவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். மலேசியாவின் புத்ராஜெயாவில் நடந்த தலைவர்களின் 9வது ஓய்வுத்தளச் சந்திப்பின் போது அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மதை திரு லீ நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, கடல் எல்லை, ஆகாயவெளி, தண்ணீர், இணைப்புத்திறன் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். ஒத்துழைப்புமிக்க, முன்னோக்கிய இரு தரப்பு உறவுக்குக் கடப்பாடு கொண்டுள்ளதை இரு நாட்டுப் பிரதமர்களும் மறுஉறுதி செய் தனர். அதன்பின் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். "சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடை யிலான உறவானது வலுவான குடும்ப, வர்த்தக உறவுகள் என நமது நீண்டகால வரலாற்றில் வேரூன்றி உள்ளது. மலேசியாவின் புதிய அரசாங்கத்துடனும் அது தொடரும்," என்று பிரதமர் லீ தெரிவித்தார். ஜோகூர் ஆறு மாசடைந்திருப்பது தொடர் பிலும் அந்த ஆற்றில் இருந்து நீண்டகாலத் திற்கு, தாக்குப்பிடிக்கத்தக்க அளவில் நீர் எடுப்பது தொடர்பாகவும் திரு லீ தமது அக்க றைகளை முன்வைத்தார். ஜோகூர் ஆற்றுநீரில் அமோனியா கூடுத லாக இருந்ததால் கோத்தா திங்கியில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்ச் சுத்தி கரிப்பு ஆலை கடந்த வாரம் மூடப்பட்டது. அந்த ஆற்றின்மீது ஜோகூர் அரசாங்கம் இரு நீர் ஆலைகளைக் கட்டி இருப்பதையும் திரு லீ சுட்டினார். ஆதலால், இரு நாடுகளும் பாதிக்கப்படாத வகையில் தாக்குப்பிடிக்கத்தக்க அளவுக்கு நீர் விநியோகம் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் பூசல் எழும் சாத்தியத் தைக் குறைக்கலாம் என்றார் அவர். ஜோகூரின் பாசிர் கூடாங் மேலுள்ள ஆகாயவெளியை நிரந்தரக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்திருந்த மலேசியா, அதைக் காலவரம்பின்றி நிறுத்திவைக்க முடிவு செய்து உள்ளது. அதேபோல, சிங்கப்பூரும் சிலேத்தார் விமான நிலையத்தில் 'ஐஎல்எஸ்' எனும் விமானம் தரையிறங்கும் நடைமுறைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதையடுத்து, மலேசியாவின் ஃபயர்ஃபிளை நிறுவனம் சிலேத்தார் விமான நிலையத்தில் தனது விமானச் சேவையைத் தொடங்க நிலவிய தடைகள் நீங்கிவிட்டன எனத் திரு லீ குறிப்பிட்டார்.