எங்கே 'கணேசா' ? தேடல் தீவிரம்

எங்கே 'கணேசா' ? தேடல் தீவிரம்

1 mins read
03084d21-5577-4d3d-b342-2cd393a47102
கணேசாவைப் போல தோற்றத்தைக் கொண்ட ஒரு மாடு. -

லிம் சூ காங் வட்டாரத்திலுள்ள விக்னேஷ் பால் பண்ணையிலுள்ள தனது தொழுவத்திலிருந்து தப்பியோடிய 'கணேசா' என்ற காளைக் கன்று தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் உணவு அமைப்பையும் தேசிய பூங்காக் கழகத்தையும் சேர்ந்த சுமார் 15 அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அந்தக் காளையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பும் வெள்ளையுமாக இருக்கும் அந்த இரண்டு வயது கன்று, இன்று காலை பண்ணையின் வேலியை உடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையின் வளாகத்தில் அந்தக் காளை எங்கேயாவது இருக்கும் என அதன் உரிமையாளர் திரு மணிகண்டன் நம்புகிறார். காளையால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரும் எனத் தாம் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "பொது இடங்களுக்கோ திறந்தவெளிச் சாலைகளுக்கோ அந்தக் கன்று செல்லவில்லை. அது எங்கள் பண்ணையில் இன்னமும் உள்ளது," என்று திரு மண்கண்டன் கூறினார்.

பண்ணையிலுள்ள 36 மாடுகளில் கணேசாவும் ஒன்று. காளையைக் காண நேரிட்டால் அதனை அணுக வேண்டாம் என சிங்கப்பூர் உணவு அமைப்பு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.