இருபது மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல்

இருபது மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல்

2 mins read
11fd271f-f2cb-4d77-8fae-e2fae2ac0093
-

இந்தியாவின் இருபது மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. அத்துடன், இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 91 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு இந்த முதற்கட்ட தேர்தலில் இடம்பெறும். மொத்தம் 20 மாநிலங்கள் முதற்கட்ட தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. ஆந்திர பிரதேசம் (25 தொகுதிகள்)

2. அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்)

3. அசாம் (5 தொகுதிகள்)

4. பீகார் (4 தொகுதிகள்)

5. சத்தீஷ்கார் (1 தொகுதி)

6. மகாராஷ்டிரா (7 தொகுதிகள்)

7. மணிப்பூர் (1 தொகுதி)

8. மேகாலயா (2 தொகுதிகள்)

9. மிஸோரம் (1 தொகுதி)

10. நாகலாந்து (1 தொகுதி)

11. ஒடிசா (4 தொகுதிகள்)

12. தெலுங்கானா (17 தொகுதிகள்)

13. திரிபுரா (1 தொகுதி)

14. உத்தர பிரதேசம் (8 தொகுதிகள்)

15. உத்தரகாண்ட் (5 தொகுதிகள்)

16. மேற்கு வங்காளம் (2 தொகுதிகள்)

17. காஷ்மீர் (2 தொகுதிகள்)

18. லட்சத்தீவுகள் (1 தொகுதி)

19. சிக்கிம் (1 தொகுதி)

20. அந்தமான் நிகோபார் தீவுகள் (1 தொகுதி)

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலில் நடைபெறும்.