ஜோகூர்: பெட்ரொனாஸ் எண்ணெய், எரிவாயு ஆலையில் வெடிப்பு

ஜோகூர்: பெட்ரொனாஸ் எண்ணெய், எரிவாயு ஆலையில் வெடிப்பு

1 mins read
2f3fb885-c018-4b5b-a4a3-ba8817e6afd9
-

ஜோகூரிலுள்ள 'பெட்ரொனாஸ் பெங்கராங் இன்டிகிரேட்டட் காம்ப்ளெக்ஸ்' எண்ணெய், எரிவாயு ஆலையில் தீச்சம்பவமும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக 'த ஸ்டார்' தெரிவித்தது.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) அதிகாலை 1.25 மணிக்கு நிகழ்ந்ததாக பெட்ரொனாஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அந்தத் தீயை அரை மணி நேரத்திற்குள் அணைத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் அசம்பாவிதம் நேர்ந்துள்ளதா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை

"நிலவரம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால் இது குறித்த மேல் விவரங்களை நாங்கள் பின்னர் வெளியிடுவோம்," என்றது பெட்ரொனாஸ்.

வெடிப்பின் அதிர்வுகள் பாசிர் கூடாங் வரை உணரப்பட்டதாக இணையவாசிகள் சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. ஆலையிலிருந்து மிகப்பெரிய தீப்பிழம்பு எரிந்துகொண்டிருப்பதையும் கரும்புகை வெளிவருவதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

Watch on YouTube