'நோட்ர டேம்' தீச்சம்பவம் 'விபத்தாக இருக்கலாம்'

1 mins read
55bd0205-0ddf-45a3-a2af-9ba0fba397fb
-

'நோட்ர டேம்' தேவாலயத்தில் நடந்த தீச்சம்பவம் விபத்தாக இருக்கலாம் என்று பிரஞ்சு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தின் கூரையில் மூண்ட பெருந்தீயை அணைக்க 400க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் முயன்றனர். இந்த முயற்சியில் தீயணைப்பாளர் ஒருவர் கடுமையாகக் காயமடைந்தார். பின்னர் அந்தத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக பிரஞ்சு தீயணைப்புப் படையின் பேச்சாளர் கேப்ரியல் பிளஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சேதமடைந்த இந்தத் தேவாலயத்தை பிரான்ஸ் சீரமைக்கும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவெல் மக்ரோன் உறுதி கூறினார்.