இந்தியாவின் பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலின் மூன்றாவது கட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
117 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முழுவீச்சில் இன்று முழுவதும் நடைபெற உள்ளது.
கீழ்க்காணும் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது:
கேரளா (20 தொகுதிகள்)
குஜராத் (26 தொகுதிகள்)
கோவா (இரண்டு தொகுதிகள்)
அசாம் (நான்கு தொகுதிகள்)
பீகார் (ஐந்து தொகுதிகள்)
சத்தீஷ்கார் (ஏழு தொகுதிகள்)
கர்நாடகா (14 தொகுதிகள்)
மகராஷ்டிரா (14 தொகுதிகள்)
ஒடிசா (ஆறு தொகுதிகள்)
உத்தரப் பிரதேசம் (10 தொகுதிகள்)
மேற்கு வங்காளம் (ஐந்து தொகுதிகள்)
காஷ்மீர் (ஒரு தொகுதி)
திரிபுரா (ஒரு தொகுதி)
இவற்றைத் தவிர தத்ராநகர், டாமன் டையூ ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கிறது.
மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 24.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்களித்திருக்கிறார்.

