வாக்களித்தார் மோடி

வாக்களித்தார் மோடி

1 mins read
a1ca4a29-948c-4c68-9283-a22b3ec07ca4
-

இந்தியாவின் மூன்றாம் கட்ட பொதுத்தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரில் வாக்களித்திருக்கிறார்.

குஜராத்தின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. ரனிப் வட்டாரத்திலுள்ள நிஷான் மேல் உயர்நிலைப்பள்ளியின் வாக்குச் சாவடியில் திரு மோடி வாக்களித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதிகளுக்குக் குண்டுகள் ஆயுதம் என்றால் ஜனநாயகத்திற்கு வாக்குகள்தான் ஆயுதம் என்றும் குண்டுகளைவிட வாக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் திரு மோடி, வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.