துவாஸில் புதிய ரயில் சோதனை நிலையம்

துவாஸில் புதிய ரயில் சோதனை நிலையம்

1 mins read
9c175b70-ed20-4558-a146-81b62216dc9a
-

ஒருங்கிணைந்த ரயில் சோதனை நிலையத்தை சிங்கப்பூர் கட்டவுள்ளது. அன்றாடம் செயல்படும் ரயில் சேவைகளைப் பாதிக்காதவாறு புதிய ரயில்களையும் ரயில் அமைப்புகளையும் சோதிக்க இந்நிலையம் பயன்படுத்தப்படும்.

துவாஸிலுள்ள முன்னாள் ராஃபிள்ஸ் கன்ட்ரி கிளப்பின் 50 ஹெக்டர் நிலத்தில் 'ஐடிடிசி' என்ற இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது. சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் சேவைத் திட்டத்திற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

கிம் சுவான் ரயில் பணிமனையிலுள்ள 'ஓசிசி' எனப்படும் புதிய வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு தட செயலாக்கக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் புதன்கிழமை வருகையளித்தபோது 'ஐடிடிசி' நிலையத்தைப் பற்றி அறிவித்தார்.

"இந்த நிலையத்தைக் கட்ட சில நூறு மில்லியன் வெள்ளி செலவாகும். ஆனால் இது பலனளிக்கும் முதலீடு," என்றார் திரு கோ.

பராமரிப்புப் பணிகளுக்கான நேரத்தை இந்நிலையம் விரிவுபடுத்தும் என்றும் இதனால் ரயில் தடங்களை மூடுவதற்கான அவசியம் குறையும் என்றும் அவர் விளக்கினார்.