உச்ச விழிப்புநிலையில் இலங்கை

உச்ச விழிப்புநிலையில் இலங்கை

1 mins read
ab6a0212-b111-40c0-b841-432f7578517b
-

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் தின தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மேலும் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ சீருடைகளை அணிந்த அந்தப் பயங்கரவாதிகள் பார்ப்பதற்கு ராணுவ அதிகாரிகளைப் போலவே இருப்பார்கள் என இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து போலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளனர். இதுவரை சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், முகத்தை மூடி மறைக்கும் முக்காடுகளை முஸ்லிம் பெண்கள் அணிவதைத் தடை செய்ய அவசரச் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.