மீன்கள் இறந்ததற்கு அதிக வெப்பமே காரணம்

மீன்கள் இறந்ததற்கு அதிக வெப்பமே காரணம்

1 mins read
087e6982-bb23-4688-92d1-7ae82117edf8
-

லிம் சூ காங் அணைகரைக்கு அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் மாண்டுபோனதற்கு அண்மை வெப்பமான பருவநிலை காரணமாக இருந்திருக்கலாம். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த மீன்கள் கடல்மீது மிதந்து கொண்டிருந்ததாக சிங்கப்பூர் மீன் பண்ணைகள் சங்கம் தெரிவித்தது.

அண்மை சில நாட்களாக வெப்பநிலை அதிகமாக இருந்ததால் தண்ணீரில் பிராணவாயு குறைந்ததாகவும் இதனால் மீன்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். அணைகரைக்கு அருகில் உள்ள மீன் பண்ணையாளர்கள் மோட்டார் படகுகளை அனுப்பி மாண்ட மீன்களை அப்புறப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நான்கைந்து பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு 4,000 வெள்ளி வரை இழப்பு நேர்ந்ததாகக் கூறுகின்றனர்.

தண்ணீரில் பிராணவாயு குறைந்தது இதற்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.