'ஃபானி சூறாவளி' : ஆபத்தைச் சமாளிக்க ஆயத்தப் பணிகள்

'ஃபானி சூறாவளி' : ஆபத்தைச் சமாளிக்க ஆயத்தப் பணிகள்

1 mins read
c4b6cc2d-9d9c-43f5-b2af-9ff015adec57
-

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி நகரை 'ஃபானி சூறாவளி' காலை 8 மணி முதல் 10 மணிக்குள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒடிசாவின் 11 கரையோர மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவ அதிகாரிகள் போர்க்கால பாணியில் மக்களை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புவனேஸ்வர் நகரில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைப் பொட்டலமிட்டு வருகின்றனர். இந்தியாவின் தேசிய பேரிடர் நிர்வாகப் படை ஒடிசாவில் 28 குழுக்களையும் ஆந்திரப் பிரதேசத்தில் 12 குழுக்களையும் மேற்கு வங்காளத்தில் ஆறு குழுக்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் 89 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயலுக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

'ஃபானி சூறாவளி' நாளை மாலை பங்ளாதேஷ் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.