இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் ஃபானி புயல் கடற்கரையைத் தாண்டிதைத் தொடர்ந்து இருவர் பலியாகியுள்ளனர். புயல் காற்றில் விழுந்த மரங்களால் அடிபட்டு அவர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கூடிய கனத்த மழை இடைவிடாமல் பெய்கிறது. புயலில் பல்வேறு மரங்கள் சாய்ந்ததுடன் சில இடங்களில் குடிசைகள் இடிந்து தரைமட்டமாயின. மணிக்கு 175 கிலோமீட்டர் புயல் காற்று வீசுவதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷாவின் 11 கரையோர மாவட்டங்களிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவ அதிகாரிகள் போர்க்கால பாணியில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் பேரிடர் நிர்வாக அமைப்பு, கடற்படை, ராணுவம் ஆகியவை அரசாங்கத்துடன் துரிதமாகச் செயல்படுவதாக அவர் கூறினார்.
புயலின் காரணமாக பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

