ஃபானி புயல் - 12 பேர் பலி

ஃபானி புயல் - 12 பேர் பலி

1 mins read
dbf57eb9-bb6d-400d-a6e1-bcd34c2e34bc
-

ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையைத் தாண்டியதை அடுத்து பெய்த கனமழையால் 12 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் பூரி நகரில் காற்று மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

அந்தப் புயல் சனிக்கிழமை காலை மேற்கு வங்காளத்தை அடைந்தது. அதிகாரிகளால் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள கிட்டத்தட்ட 1.1 மில்லியன் பேர் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.

புவனேஸ்வர் நகரில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைப் பொட்டலமிட்டு வருகின்றனர். இந்தியாவின் தேசிய பேரிடர் நிர்வாகப் படை ஒடிசாவில் 28 குழுக்களையும் ஆந்திரப் பிரதேசத்தில் 12 குழுக்களையும் மேற்கு வங்காளத்தில் ஆறு குழுக்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.