நியூயார்க்கின் புரூக்லின் நகரில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு கார், கட்டடம் ஒன்றின்மீது மோதியதை அடுத்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அது, உயர்வேகத்தில் சென்று இரண்டு மாடிக் கட்டடத்தின்மீது மோதியது.
ஈஸ்ட் 5 ஸ்திரீட்டிக்கு அருகிலுள்ள அவென்யூ பியில் இந்தச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி இரவு 11.27 மணிக்கு நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பாளர்களும் மீட்புப் பணியாளர்களும் விரைந்தனர். அதிர்ஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

