வெற்றிக்கும் வேதனைக்கும் வித்திட்ட ஒரே புள்ளி

வெற்றிக்கும் வேதனைக்கும் வித்திட்ட ஒரே புள்ளி

1 mins read
e3bf983e-412a-405c-a102-0e16c3a39195
-

மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு 'பிரிமியர் லீக்' வெற்றிக் கிண்ணம் கிடைத்திருக்கிறது. இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்ட 'லிவர்பூல்' அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

'பிரைட்டன்' குழுவுக்கு எதிராக ஆடிய மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. லிவர்பூலுக்கும் 'வுல்வர்ஹெம்ப்டன்' அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 2-0 கோல் கணக்கில் வென்றபோதும் லீக் பட்டியலில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டியிடம் தோற்றது.

தமக்குக் கிடைத்த வெற்றிகளில் இது ஆகக் கடினமாகப் பெறப்பட்ட வெற்றி என்று மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். எத்திஹாட் விளையாட்டரங்கில் கூடியிருந்த சுமார் 10,000 ரசிகர்கள் தங்கள் அணிக்குக் கிடைத்த இந்த வெற்றியை மனநிறைவுடன் கொண்டாடினர்.

ஆனால், ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை, லிவர்பூல் தனக்குத் தேவையான கோல்களைப் பெற்று மான்செஸ்டர் சிட்டியை முந்தக்கூடாது என்ற 'வுல்வர்ஹெம்ப்டன்' ரசிகர்களது மனநிலை ஆட்டத்தின்போது அவர்கள் முழங்கிய வாசகங்களில் தெரிந்தது. முப்பது ஆட்டங்களில் வென்றும் 97 புள்ளிகளைப் பெற்றும் லீக் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றிராத சோகத்தில் லிவர்பூலும் அதன் ரசிகர்களும் மூழ்கியுள்ளனர்.