நியூயார்க்: ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர் - இருவர் காயம்

நியூயார்க் நகரிலுள்ள ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்ததில் அதன் ஓட்டுநரும் அந்நேரத்தில் தரையில் இருந்த சரக்குப் பணியாளரும் (dockworker) இலேசாகக் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் தீயெனப் பரவுகின்றன. இதில் மரணமும் கடுமையான காயங்களும் நேராதது குறித்து நிம்மதி அடைவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நேரத்தில் உதவி செய்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நியூயார்க் நகர மேயர் பில் டி பிலாசியோ டுவிட்டரில் கூறினார்.

ஹெலிகாப்டரை ஓட்டிய 34 வயது விமானியின் இடது கையில் சிறு காயம் பட்டதாக நியூயார்க் போலிஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தன் மீது விழவிருந்த ஹெலிகாப்டரைக் கண்டு அதனிடமிருந்து தப்பிக்க சரக்குப் பணியாளர் பக்கவாட்டில் குதித்து விழுந்ததாகவும் அதனால் அவரது வலது கை மணிக்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது ஹெலிகாப்டருக்குள் விமானியைத் தவிர வேறு எவரும் இல்லை என்றனர் போலிசார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!