ஹுவாவெய் நிறுவனத்தைச் சார்ந்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பாதிப்பு

ஹுவாவெய் நிறுவனமும் அதனைச் சார்ந்துள்ள 68 நிறுவனங்களும் இனி அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து இயந்திரப் பாகங்களை வாங்க முடியாது என்று அமெரிக்காவின் வர்த்தக அமைச்சு முடிவு செய்திருக்கிறது. ‘என்டிடி லிஸ்ட்’ என்ற பட்டியலில் சேர்க்கப்படும் நிறுவனங்களுக்கு இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன.

தடை உத்தரவு உடனே நடப்புக்கு வருவதாக வர்த்தகப் பேச்சாளர் தெரிவித்தார். பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருக்கும் ஹுவாவெய்யுடன் சார்புள்ள நிறுவனங்களுக்கு இந்தத் தடை அமல்படுத்தப்படும்.

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து இயந்திரப் பாகங்களை வாங்க விரும்பும் இந்நிறுவனங்கள் இனிமேல் அது குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கவேண்டும். வாங்கல் நடவடிக்கைக்கான காரணங்கள் வலுவாக இல்லையானால் அத்தகைய விண்ணப்பங்கள் அநேகமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இல்லவாசிகள் பயிற்சிக்குப் பயன்படுத்தும் பந்தை வீசிப் பார்க்கும் துணைப் பிரதமர் ஹெங்.(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

நாட்டு வளர்ச்சியில் அனைவருக்கும் பங்குண்டு