சிங்கப்பூர் விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ‘ஸ்கூட்’ விமானம் நேற்றுக் காலை சென் னையில்அவசரமாகத் தரை இறங் கியது. 

அதன் சரக்குப் பகுதியில் தீப் பிடித்திருப்பதாக விமானிகளுக்குச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரை இறக்க அவர்கள் அனுமதி கேட்டனர்.

திருச்சியில் இருந்து அந்த TR567 விமானம் உள்ளூர் நேரப் படி ஞாயிறு பின்னிரவு 1.30 மணிக்குக் கிளம்பியதாகவும் சிறிது நேரத்தில் அதன் சரக்குப் பகுதி யில் புகை எச்சரிக்கைக் கருவி செயல்படத் தொடங்கியதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித் தாளிடம் ஸ்கூட் விமான நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஏர்பஸ் V-320 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் அப் போது 165 பயணிகளும் ஆறு விமான ஊழியர்களும் இருந்தனர். அவசர அறிவிப்பை வெளியிட்ட விமானிகள் உடனடியாக விமா னத்தை சென்னைக்குத் திருப் பினர். 

இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாகத் தரை இறங்கியது.

பயணிகள் அனைவரும் விமா னத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட னர். அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டது. 

புகை எச்சரிக்கைக் கருவித் தவ றுதலாகச் செயல்படத் தொடங்கி யதாக ஆரம்பக்கட்ட விசாரணை தெரிவிப்பதாக அந்தப் பெண் பேச்சாளர் கூறினார். 

இருப்பினும் பயணிகளை அழைத்துவர மாற்று விமானம் ஒன்று சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் அந்த விமானம் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படத் திட்டமிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரி வித்தார்.

நேற்றிரவு 10 மணிவாக்கில் கிட்டத்தட்ட 14 மணி நேரம் தாம தமாக அந்த விமானம் சிங்கப்பூர் வந்து சேரக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. 

பயணிகளின் பாதுகாப்பை ஸ்கூட் நிறுவனம் முக்கியமாகக் கருதுவதாகவும் ஏற்பட்ட சிரமத் திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இல்லவாசிகள் பயிற்சிக்குப் பயன்படுத்தும் பந்தை வீசிப் பார்க்கும் துணைப் பிரதமர் ஹெங்.(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

நாட்டு வளர்ச்சியில் அனைவருக்கும் பங்குண்டு