ஈஸ்டர் தாக்குதல்; அமைதிக்காகப் பிரார்த்தனை

1 mins read
838a5749-ce76-4acb-a132-a5de7e7e17d2
-

இலங்கையின் தலைநகர் கொழும் பில் ஈஸ்டர் தினத்தன்று வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகியுள்ளது. அத்தாக்கு தலில் உயிரிழந்தோரின் குடும்பத் தினர் தாக்கப்பட்ட தேவாலயத் திற்குச் சென்று தங்கள் அன்புக்கு உரியவர்களின் ஆத்ம அமைதிக் காக வழிபாடு செய்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற அந்தத் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 25 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிலவிய இந்தத் தாக்குதல் அமைதியை ஒரேயடியாகக் குலைத்திருக்கிறது. தாக்குதலில் 'மதர் ஒஃப் சேட்டன்' என்ற வெடிபொருள் பயன்படுத்தப் பட்டதாக புலனாய்வு விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தி ருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரும்பிப் பயன்படுத்தும் வெடிபொருள் இதுவே ஐ.எஸ் இத்தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டில் பாரிசிலும் 2017ஆம் ஆண்டில் மான்செஸ்டர் அரங்கிலும் கடந்தாண்டு இந்தோனீசிய தேவாலயங்களிலும் நிகழ்ந்த தாக்குதலில் இந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது. தாக்குதல் நிகழப்போவதை இந்தியா ஏப்ரல் மாதம் எச்சரித்தபோதும் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அந்நாட்டின் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணையில் எட்டு நாடுகள் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.