சுடச் சுடச் செய்திகள்

முன்னிலையில் பாஜக

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் அதன் கூட்டணிக் கட்சியின் பிரமுகர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றது போன்ற ஒரு கொண்டாட்ட உணர்வு மேலோங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்படி ஆட்சியை நடத்தலாம், எத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தலாம்  என்ற கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன.

இந்தியப் பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன. தேர்தலில் பாரதிய ஜனதா மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியடையும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இதனை வெற்றியாகவே நினைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி பாஜக கலந்துரையாடத் தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் எதிர்க்கட்சிகளின் இடையூறு இன்றி நாட்டைச் சுலபமாக நிர்வகிக்கலாம். ஆனால் திரு மோடிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீர் விவகாரம், அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் மற்ற கட்சிகளுடன் கடும் மோதல்கள் ஏற்படலாம்.

2014ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலில் திரு மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா 282 நாடாளுமன்ற இடங்களைப் பெற்று வெற்றியடைந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இந்திய மக்களவையில் எந்த ஒரு கட்சியும் இதுவரை அறுதிப் பெரும்பான்மை பெற்றதில்லை. பாரதிய ஜனதாவுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.ஆயினும், இம்முறை வெற்றி தனக்கே என்று காங்கிரஸ் நம்புகிறது. பாரதிய ஜனதா சமயச் சர்ச்சைகளை விளைவிக்கும் கட்சி என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்னை முன்னிலைப்படுத்துகிறது காங்கிரஸ். தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என்றும் இதற்காக மனம் தளரவேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon