மீண்டும் மோடி ஆட்சி

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை பெற் றுள்ளது. கடந்த பொதுத் தேர்த லைக் காட்டிலும் இது அதிகம். 2014ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முற்போக்குக் கூட்டணி 336 தொகுதிகளை வென்றது.

கடந்த முறை 282 தொகுதி களைக் கைப்பற்றி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை 298 தொகுதி களில் முன்னிலை பெற்று தனது நிலையை வலுப்படுத்திக் கொண் டுள்ளது. வாரணாசி தொகுதி யைத் தக்கவைத்துக்கொண்டார் பிரதமர் மோடி. பாஜக தலைவர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் வாகை சூடி னார். இதன்மூலம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மெய்யாகியுள்ளன. பாஜகவின் வெற்றிமுகத்தைத் தொடர்ந்து வரலாற்றில் முதன்முறையாக மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 40,000ஐ தாண்டியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யால் 92 தொகுதிகளில் முன்னி லையில் இருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதி யில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனார். ஆயினும், கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் கிட்டத்தட்ட 700,000 வாக்குகளுடன் முன்னி லையில் இருந்தார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதே சம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங் களில் நடந்த சட்டமன்றத் தேர் தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, இம்முறை அம்மூன்று மாநிலங் களிலும் இழந்த செல்வாக்கை மீட்டு, தன் கையை ஓங்கச் செய்தது. அதேபோல, தலைநகர் புது டெல்லியில் ஏழு தொகுதிகளி லும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜக முன்னி லையில் இருந்தது.மேற்கு வங்க மாநிலத்தில் 18 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது, அங்கும் பாஜக ஆழ மாகக் கால்பதிக்கத் தொடங்கி இருப்பதை உணர்த்துகிறது.

இந்நிலையில், திரு மோடி நாளை மறுநாள் 26ஆம் தேதி அதிபர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் அன்றைய தினமே பதவியேற்பு விழா நடை பெறலாம் என்றும் தகவல் வெளி யாகி இருக்கிறது. வெற்றிமுகத்தைத் தொடர்ந்து தமது மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட திரு மோடி, “ஒன்றிணைந்து முன்னேறுவோம்; செழிப்புறுவோம்; வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்றுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் லீ வாழ்த்து

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், திரு மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “இந்த அபார வெற்றி தங்க ளின் தலைமைத்துவம் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது,” என்று திரு லீ தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள் ளார். இதேபோல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் திரு மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!