புதிய ரயில் தடம், ரயில் நிலையங்கள்

சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதி யில் வடக்கு தெற்கு ரயில்தடத்தில் இரண்டு புதிய எம்ஆர்டி நிலை யங்கள் கட்டப்பட உள்ளன. 2030 ஆம் ஆண்டுகளில் டெளன்டவுன் ரயில் தடம் விரிவாக்கப்படும்போது இவற்றில் ஒரு நிலையம் அதனுடன் இணைக்கப்படும்.

உட்லண்ட்ஸ் நார்த்தில் தொடங்கி சுங்கை பிடோக்கில் முடிவுறும் புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடம் சாங்கி விமான நிலையத்துடன் நேரடியாக இணையும் வகையில் விரிவுபடுத் தப்படும். உட்லண்ட்ஸில் தொடங்கி கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட் வரையிலான உத்தேச புதிய ரயில் தடம் ஒன்றும் ஆராயப்பட்டு வரு கிறது. இப்புதிய வழித்தடம் உரு வாக்கப்பட்டால் உட்லண்ட்ஸ், செம் பவாங், செங்காங், சிராங்கூன் நார்த், வாம்போ, காலாங் போன்ற நகர்களில் உள்ள 400,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடை யும்.

‘எல்டிஎம்பி’ எனப்படும் நிலப் போக்குவரத்து பெருந்திட்டம் 2040ன் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்து மேம்பாடு தொடர் பான இந்த அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. எல்லா புதிய ரயில் திட்டங்களும் நடப்புக்கு வரும்போது 2040ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரின் ரயில் கட் டமைப்பு கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டருக்கு விரிவடையும். தற்போது அந்த தூரம் 229 கிலோ மீட்டராக உள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை அடுத்த இருபதாண்டு களுக்கு சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற இருக்கும் நிலப் போக்குவரத்து வசதிக்கான நீண்டகாலத் திட்டங்களை விவ ரிக்கிறது. ‘எல்டிஎம்பி’ ஆலோ சனைக் குழு 7,400க்கும் மேற்பட்ட அமைப்புகளிடம் இருந்து திரட்டிய கருத்துகளின் அடிப்படையில் பரிந் துரைகளை வழங்கி இருந்தது. அந்தப் பரிந்துரைகளை கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

மூன்று முக்கிய கருப்பொருட் களை உள்ளடக்கியதாக பரிந்துரை கள் இருந்தன. 45 நிமிடத்தில் மத்திய வட்டாரத்தையும் 20 நிமி டத்தில் குடியிருப்பு நகர் பகுதிக ளையும் சென்றடையும் பயணம், எல்லாருக்கும் போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பயணங்களுட னான சுகாதார வாழ்க்கை - ஆகி யன அந்த அம்சங்கள். வடக்கு தெற்கு வழித்தடத்தில் அமைய இருக்கும் இரு புதிய நிலையங் களும் 45 நிமிடங்களுக்குள் நக ரத்தை அடையும் பயண இலக் கிற்குப் பங்களிக்கும். மேலும், கிராஞ்சி, இயூ டீ நிலையங்களுக்கு இடையில் சுங்கை காடுட் ரயில் சந்திப்பு கட்டப்பட உள்ளது. டௌன்டவுன் ரயில் வழித்தடத் தின் கடைசி ரயில் நிறுத்தமாக அது இருக்கும்.

சுவா சூ காங், புக்கிட் கோம் பாக் நிலையங்களுக்கு இடையில் அமையவிருக்கும் பிரிக்லேண்ட் நிலையம் கியட் ஹோங், தெங்கா போன்ற பகுதிகளின் குடியிருப் பாளர்களுக்குச் சேவை புரியும். அதேபோல உட்லண்ட்ஸ்-கிரேட் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட் உத்தேச ரயில் தடம் வடக்கு-தெற்கு வழியில் உள்ள நெருக்கடியைக் குறைக்க உதவுவதோடு எம்ஆர்டி கட்டமைப்பின் மீள்திறனைப் பலப் படுத்தும் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!