அடுத்த ஆண்டுக்குள் பாதிக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளும் தங்களது அரையாண்டு தேர்வை முன்னதாகவே ரத்து செய்யும் என்று கல்வியமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிரியர்களுக்கான மாநாட்டில் திரு ஓங் இதனைக் கூறினார். 2021ஆம் ஆண்டுக்குள் தொடக்கநிலை மூன்று, தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை ஒன்று, உயர்நிலை மூன்று ஆகியவற்றுக்கான அரையாண்டு தேர்வுகளைப் பள்ளிகள் அகற்ற வேண்டும் என்று கல்வியமைச்சு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. தேர்வு மதிப்பெண்கள் மீதான குறுகிய கவனத்திலிருந்து வெளிவரவும் கற்றலின் இன்பத்தை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவி செய்யவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது. இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான அட்டவணையைக் கல்வியமைச்சு வெளியிட்டபோதும், காலக்கெடுவுக்கு முன்னதாகவே செயலில் இறங்க பல பள்ளிகள் முடிவெடுத்திருப்பதாகத் திரு ஓங் கூறினார். சில தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இந்த மாற்றத்தை இவ்வாண்டே செயல்படுத்தியுள்ளனர். வேறு சில பள்ளிகள் மற்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுகளை அகற்ற முடிவு செய்துள்ளன.
அரையாண்டு தேர்வுகளை 2020ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே அகற்றப்போகும் பள்ளிகள்
1 mins read
-

