தெம்பனீஸ் வட்டாரத்தில் முதியவர் ஒருவரைப் பேனாக் கத்தியால் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். முக்காடு கொண்டுள்ள கறுப்பு நிற 'ஹுடி' சட்டை அணிந்திருந்த அந்த ஆடவர், தெம்பனீஸ் ஸ்திரீட் 21லுள்ள புளோக் 266ல் அந்த 78 வயது முதியவரிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. முதியவர் உதவிக்காகக் கூச்சலிட்டபோது ஆடவர் தப்பியோடினார். முதியவரின் பொருட்கள் எதையும் அவர் எடுத்துச் செல்லவில்லை. முதியவரும் எந்தக் காயமுமின்றி தப்பித்தார். பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை புதன்கிழமை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையையும் குறைந்தது 12 பிரம்படிகளையும் எதிர்நோக்கலாம்.
முதியவரிடம் கொள்ளையடிக்க முயன்ற இளையர் கைது
1 mins read
-

