தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொத்துச் சந்தை சீர்ப்படுத்தப்பட்டது: அமைச்சர் லாரன்ஸ் வோங்

1 mins read
ef755a59-bd62-4be3-b634-6c5d7200f4b5
-

கடந்தாண்டு தொடர்ந்து அதிகரித்த சொத்து விலைகளைக் கட்டுப்படுத்தி சொத்துச் சந்தையின் சுழற்சியை சிங்கப்பூர் சீர்ப்படுத்தியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார். சொத்துச் சந்தைக்கான தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு விலைகள் வெகுவாக உயர்ந்திருந்ததாகத் திரு வோங், புளூம்பர்க் தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். சொத்து விலைகளைச் சிங்கப்பூர் தொடர்ந்து கண்காணிக்கும் என்று கூறிய அவர், அதற்கான பல வழிகளை சிங்கப்பூர் அரசாங்கம் கையாள்வதாகக் கூறினார்.