சிங்கப்பூரில் தேவையின் பேரிலான பேருந்து பயணப்பாதைகள் தற்போது அறிமுகம் செய்யப்படமாட்டா என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முன்பதிவு டாக்சி சேவையைப் போல இயங்கும் இந்தச் சேவைக்கான செலவுகள் மிக அதிகம் என்று கூறிய ஆணையம், இதற்கான ஆறு மாதகாலச் சோதனையை ஜூன் 15ஆம் தேதி நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.
வழக்கமான, முன்பே நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்லும் பேருந்துகளைக் காட்டிலும் புதியவகை பேருந்து சேவைக்கான செலவு இன்னும் அதிகமாக இருப்பதாகச் சோதனையின்மூலம் தெரிய வந்துள்ளதாய் ஆணையம் தெரிவித்தது.
சோதனையின்போது பயண தூரம் குறைந்தாலும் அதற்கான தொழில்நுட்பச் செலவுகள் கட்டுப்படியாகவில்லை என்று ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சோதனைக்காலத்தில் 26,000 பயணங்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது

