8,300 சிங்கப்பூரர்களுக்கு வரவேற்பு உறைகள்

8,300 சிங்கப்பூரர்களுக்கு வரவேற்பு உறைகள்

2 mins read
aa652e6a-243b-4152-a08e-3273bc7f0a4a
ஐடிஇ காலேஜ் சென்ட்ரலில் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்ட வரவேற்பு உறைகளைப் பெற்றுக்கொண்ட அங் மோ கியோ - ஹவ்காங் குடியிருப்பாளர்களுடன் பிரதமர் லீ சியன் லூங் (சிவப்பு சட்டையில்), நாடாளுமன்ற உறுப்பினர் டெரில் டேவிட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொருளியலை மந்தநிலையில் இருந்து மீட்டது முதல் புதிய சுயசார்புடைய நாடாக சிங்கப்பூரை நிர்மாணித்தது வரை சிங்கப்பூர் கதையின் பெரும் பகுதியை மெர்டேக்கா தலை முறை சிங்கப்பூரர்கள் எழுதி இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கல்விக் கழகம் காலேஜ் சென்ட்ரலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் 1950களில் பிறந்த 300 சிங்கப்பூரர்களுக்கு மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்பு வரவேற்பு உறைகள் (folder) வழங்கப்பட்டன. மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த பிரதமர் லீ, "நாடு சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் நாங்கள் வளர்ந்தோம். மூன்றாம் உலக நாட்டிலிருந்து முதலாம் உலக நாடாக சிங்கப்பூர் முன்னேறியபோது நாங்கள் சிங்கப்பூருடன் சேர்ந்து பயணித் தோம். நாட்டு நிர்மாணத்திலும் சிங்கப்பூரை வெற்றிகரமான நாடாக உருவாக்கவும் நாங்கள் உதவினோம்," என்றார்.

"பொருளியல் மாற்றத்தை உருமாற்றி, ஊழியரணியை மேம் படுத்திய காலத்தில் பல பொருளி யல் நெருக்கடிகளை எதிர்கொண் டோம், பல பணியாளர்கள் இடம் மாறினர், நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கினர்," என்றாரவர்.தீவு முழுவதும் நேற்று நடைபெற்ற சமூக நிகழ்வுகளில் சுமார் 8,300 சிங்கப்பூரர்கள் தங்களது வரவேற்பு உறைகளைப் பெற்றுக்கொண்டனர். வரும் வாரங்களில் நடைபெறவுள்ள சமூக நிகழ்ச்சிகளில் மெர்டேக்கா தலைமுறையினர் தங்களது வர வேற்பு உறைகளைப் பெற்றுக் கொள்வர் என்று கூறப்பட்டது.

மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்புதல், 'சாஸ்' மருந்தகங்களில் வெளிநோயாளிகளுக்கான உத வித்தொகை உள்ளிட்ட தொகுப்பு அதில் வழங்கப்பட்டது. இவ்வாண்டு நடத்தத் திட்ட மிடப்பட்டிருந்த 23 மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சிகளில் முதல் நிகழ்ச்சி நேற்று நடத்தப் பட்டது. தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்யும் சாலைக்காட்சிகள் மெர்டேக்கா தலைமுறையினர், அவர்களது குடும்பத்தார் என சுமார் 100,000 பேரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துடிப்புடன் மூப்படைதல், மின் னிலக்க கல்வியறிவு தொடர்பான தகவல்கள், 'ஆக்டிவ்எஸ்ஜி' நட வடிக்கைகளில் மலிவுக் கட்டண வசதி, விளையாட்டுகள் போன் றவை சாலைக்காட்சிகளில் இடம் பெற்றன. இம்மாதம் 22ஆம் தேதி 'அவர் தெம்பனிஸ் ஹப்' பில் சாலைக்காட்சி நடைபெறும்.