பாலியல் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக போலிசார் நடத்திய ஐந்து நாள் சோதனையில் மொத்தம் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட 31 ஆடவர்களையும் 25 பெண்களையும் கைது செய்ததாக போலிசார் இன்று தெரிவித்தனர்.
லிட்டில் இந்திய வட்டாரத்திலும் அதற்கு அண்மையிலும் உள்ள ஜாலான் பாசா, பெல்லிலியோஸ் ரோடு, சையது அல்வி, ரங்கூன் ரோடு, ரொவெல் வோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு மேல் சோதனை நடத்தினர்.
விலைமாதர் மூலம் வருமானம் சம்பாதிப்பவர்கள் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையையும் 10,000 வெள்ளி அபராதத்தையும் எதிர்நோக்கலாம். தங்களது சொந்த இடத்தை மற்றவர்கள் இணைந்து சூதாட்ட நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் 50,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்

