சிங்கப்பூரில் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தித் தகடு

சிங்கப்பூரில் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தித் தகடு

2 mins read
1139174f-a265-46b0-b065-4298bb82ac12
துவாஸில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தித் தகடுகள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

உலகின் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தித் தகடு சிங்கப்பூரின் தெங்கே நீர்த்தேக்கத்தில் பொருத் தப்படக்கூடும். கரிமத்தின் வெளிப்பாட்டைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சி யாக பொதுப் பயனீட்டுக் கழகம் இன்று முதல் நிறுவனங்களிடம் இருந்து ஏலக்குத்தகைகளை நாடும். அந்த நிறுவனங்கள் சிங்கப்பூரின் முதலாவது ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தித் தகடு முறையை வடிவமைத்து, கட்டி, நிர்வகிக்க வேண்டும். அந்தத் தக டுகள் நீர் சுத்திகரிப்பு முறைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற் பத்தி செய்யும்.

இதைத் தவிர சிறிய அளவி லான சூரிய சக்தித் தகடுகளை பொதுப் பயனீட்டுக் கழகம் பிடோக், லோவர் சிலேத்தார் நீர்த் தேக்கங்களில் இவ்வாண்டின் பிற் பகுதியில் பொருத்தும். அவையும் நீர் சுத்திகரிப்பு முறைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற் பத்தி செய்யும் என்று தெரிவிக்கப் பட்டது. உணவுக் கழிவை வேளாண் உரமாக மாற்றுதல், கழிவு நீரை மாற்று எரிசக்தியான உயிர்வாயுவாக மாற்றுதல் ஆகியவற்றைத் தவிர, இந்த மிதக்கும் சூரிய சக்தித் தகடுகள், வளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உலகில் சிங்கப்பூரின் தாக்குப்பிடிக்கும் தன்மையை நிலைநாட்ட மற்றொரு கருவியாக விளங்கும்.

நேற்று மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'இக்கோஸ்பேரிட்டி' மாநாட்டில் உரையாற்றிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, "நமது வளங்களைப் பயன்படுத்தி, பொரு ளியலை வளர்க்கும் விதம் நிலை யற்றதாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள் புவியியல் நிலையையோ தேசிய எல் லைகளையோ பார்ப்பதில்லை," என்று கூறினார்.

ஆறாவது ஆண்டாக நடை பெறும் இந்த மாநாட்டை தெமாசெக் முதலீட்டு நிறுவனம் ஏற்று நடத்து கிறது. அதில் நிறுவனத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், புத் தாக்க நிபுணர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து வர்த்தகங்களை எவ்வாறு ஒன்றிணைத்து, நிலைத் தன்மையுடன் வளர்ப்பது என்பது பற்றி விவாதித்தார்கள். நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு லிம் பூன் ஹெங், "பருவநிலை மாற்றத்தின் நாம் வாழும் உலகில் ஏற்படும் கடுமையான விளைவுகளை நாம் புறக்கணிக்க முடியாது. இன்று நாம் எடுக்கும் முக்கியமான முடிவு எதிர்காலத்தில் நமக்குப் பலனளிக் கலாம்," என்றார்.