சிறுவனைக் கொன்ற சிறுத்தைபுலி

சிறுவனைக் கொன்ற சிறுத்தைபுலி

1 mins read
cf65501b-386b-4e83-88b8-1ff418dae6b9
-
Google News Preferred Icon

தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் சிறுத்தைபுலி ஒன்று இரண்டு வயது சிறுவனைக் கொன்றதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளர். அந்தச் சிறுத்தைபுலி தனது சுற்றடைப்பிலிருந்து தப்பித்து ஊழியர்களுக்கான வளாகத்திற்குள் புகுந்து சிறுவனைத் தாக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சம்பவம் புதன்கிழமை நேர்ந்தது.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் அந்தச் சிறுத்தைபுலியைச் சுட்டுக் கொன்றதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருவதாகப் பூங்காவின் பேச்சாளர் தெரிவித்தார். மனிதர்களை அதிகமாகக் காண்பதால் அவர்கள் மீதான பயத்தைச் சில விலங்குகள் காலப்போக்கில் இழப்பதாகவும் இதனால் மனிதர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.