டான் சுவான் ஜின்: வியட்னாமுடனான நட்புறவு பாதிக்காது

வியட்னாம் 1978ஆம் ஆண்டில் கம்போடியாவை ஆக்கிரமித்தது தொடர்பான பிரதமர் லீ சியன் லூங்கின் ஃபேஸ்புக் பதிவுக்கு அவ்விரு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கடந்த கால நிகழ்வுகளை மாற்ற முடியாது என்றும் இந்த விவகாரத்தால் சிங்கப்பூர் - வியட்னாம் இடையிலான நட்புறவு பாதிக்காது என்றும் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்துள்ளார்.

“பிரதமரின் சில கருத்துகள் வியட்னாமுக்கு அதிருப்தி அளித் திருக்கலாம். ஆயினும், நடந்தது என்ன என்பதைப் பலரும் அறிவர் என்பதால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. அத்துடன், இந்த விவகாரம் சிங்கப்பூரும் வியட்னாமும் நல்ல நண்பர்களாக அல்லது அண்டை நாடுகளாகத் தொடர்வதைப் பாதிக்காது. நாங்கள் அதில் கடப்பாட்டுடன் இருக்கிறோம்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு டான் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து முன்னாள் பிரதமரும் மன்னர் ஆலோசனை மன்றத்தின் தலைவருமான ஜெனரல் பிரேம் தின்சுலனோண்டா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவிற்கு சென்ற மாதம் 26ஆம் தேதி கடிதம் எழுதி இருந்ததாக பிரதமர் லீ அண்மையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், ஒரு தலைவராக ஜெனரல் பிரேமின் திறமைகளை பிரதமர் லீ ப் பாராட்டி இருந்தார்.

கம்போடியாவை வியட்னாம் ஆக் கிரமித்ததையும் ‘கெமேர் ரூஜ்’ஜை ஆட்சியிலிருந்து அகற்றிய கம் போடிய அரசாங்கத்தையும் அப்போதைய ஆசியான் உறுப்பு நாடு களான தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து எதிர்த்தன என்றும் அதில் திரு பிரேம் உறுதியாக இருந்தார் என்றும் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.இதன் விளைவாக, வியட்னாம் ராணுவ ஆக்கிரமிப்பும் கம்போடிய ஆட்சி மாற்றமும் அங்கீகாரம் பெறாமல் தடுக்கப்பட்டன என்றும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

திரு லீயின் இந்தக் கருத்து களுக்கு வியட்னாமும் கம்போடி யாவும் எதிர்ப்புத் தெரிவித்தன. அந்தக் கருத்துகள் ‘ஏற்கத்தக்க தல்ல’ என்றும் ‘உண்மையான தல்ல’ என்றும் கம்போடியத் தற் காப்பு அமைச்சர் ஜெனரல் டீ பான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!