'ஓயாசிஸ் வாட்டர்பார்க்' என்னும் நீர்ச்சோலை நீசூன் ஈஸ்ட்டில் திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அமையும் ஆகப்பெரிய சமூக நீர்ச்சோலை என்னும் பெருமையை இது பெறுகிறது. நேற்று பிற்பகலில் இது திறக்கப்பட்டபோது நீசூன் ஈஸ்ட் குடியிருப்பாளர்கள் தங்களது பிள்ளைகளுடன் திரண்டு வந்து குதூகலித்தனர். நீசூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லூயிஸ் இங் கோக் குவாங்கும் அவர்களுடன் கலந்துகொண்டார்.
இந்த நீர்ச்சோலைக்கான திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வந்து தற்போது எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீசூன் ஈஸ்ட் குடியிருப்பு வட்டாரம் வசிப்பதற்கான ஓர் இடமாக மட்டுமல்லாது குடும்பங்கள் தங்களது நேரத்தை நல்ல முறையில் கழிக்கும் பகுதியாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

