முதல் பொழுதுபோக்கு மன்றம் திறக்கப்படும்

முதல் பொழுதுபோக்கு மன்றம் திறக்கப்படும்

3 mins read
f260fe15-7437-40f2-b971-6cf14146e649
வெளிநாட்டு ஊழியர்களுடன் அமர்ந்து என்டியுசி மே தின கொண் டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (நடுவில்). அவருக்குப் பக்கத்தில் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவர் திரு இயோ குவாட் குவாங். படம்: ஸுலாய்கா அப்துல் ரஹீம் -

இவ்வாண்டுக்கான என்டியுசி மே தின வெளிநாட்டு ஊழியர் கள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

அதே சமயத்தில் வெளி நாட்டு ஊழியர் நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவும் நேற்று கொண்டாடப்பட்டது.

கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கலந்துகொண்டார்.

நேற்றைய கொண்டாட்டத் தில் 4,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தனது முதல் பொழுது போக்கு மன்றத்தைத் திறக்க இருப்பதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளி நாட்டு ஊழியர் நிலையம் அறிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக் காக அமைக்கப்படும் புதிய பொழுதுபோக்கு மன்றத்துக்கு MWC Recreation Club @ Soon Lee என்று பெயரிடப் பட்டுள்ளது.

51 சூன் லீ சாலையில் அமைந்துள்ள சூன் லீ பொழுதுபோக்கு நிலையத் துக்குப் பதிலாக வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் புதிய பொழுதுபோக்கு மையம் இயங் கும்.

வெளிநாட்டு ஊழியர்களுக் காக அங்கு பேரங்காடி, வங்கி மற்றும் தொலைத்தொடர்பு வசதி களை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கிரிக் கெட், ஃபுட்சால், வாலிபால், கூடைப்பந்து, சேப்பாக் தக்ராவ் மைதானங்களும் கட்டித் தரப் படும்.

அவற்றை வெளிநாட்டு ஊழியர்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய பொழுதுபோக்கு மன்றத்தை வாரத்துக்கு ஏறத்தாழ 15,000 வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அந்த வட்டா ரத்தில் உள்ள விடுதிகளில் கிட்டத்தட்ட 20,000 வெளி நாட்டு ஊழியர்கள் தங்கு கிறார்கள்.

புதிய விடுதிகள் தயாரான தும் 2020ஆம் ஆண்டுக்குள் அங்கு 30,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"புதிய பொழுதுபோக்கு மன்றத்தை நடத்துவது எங்க ளுக்கு முக்கியமான மைல்கல். சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக சேவை யாற்றி வருகிறோம்.

"வெளிநாட்டு ஊழியர்களின் நலன் காக்க நாங்கள் கொண் டிருக்கும் கடப்பாட்டைப் புதிய பொழுதுபோக்கு மன்றம் பிரதி பலிக்கிறது.

"பொழுதுபோக்கு மன்றத் தில் வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டு மன்றி அவர்களுக்குத் தேவை யான பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை அவர்கள் அங்கு எளிதில் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

"வெளிநாட்டு ஊழியர் களுடன் தொடர்புகொண்டு அவர்களது தேவை அறிந்து செயல்பட புதிய பொழுதுபோக்கு மையம் ஒரு நல்ல தளமாக அமைய வேண்டும் என விரும்புகிறோம்," என்று வெளி நாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவர் திரு இயோ குவாட் குவாங் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தங்களுடைய வேலைச் சூழலில் மனநிறைவு கண்டிருப்பதாக மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் அனுபவ ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள் 2,500 பேரும் 500 'எஸ் பாஸ்' ஊழியர்களும் பங்கெடுத்தனர்.

"சிங்கப்பூரில் வேலை செய் வதில் பெரும்பாலான வெளி நாட்டு ஊழியர்கள் மனநிறை வுடன் இருப்பதைப் பார்க்கும் போது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. வேலை செய்ய சிங்கப்பூர் உகந்த இடம் எனப் பல வெளிநாட்டு ஊழியர்கள் கருதுகின்றனர்.

"வெளிநாட்டு ஊழியர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்ய முதலாளிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் உட்பட எங்களது பங்குதாரர்களுடன் நாங்கள் தொடர்ந்து மிக அணுக்கமான முறையில் இணைந்து செயல்படுவோம்," என்று துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.