நியூயார்க் கட்டடத்தின் மேலே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; ஒருவர் மரணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹாட்டன் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் குடியிருப்புப் பகுதியில் கட்டடத்தின் மீது விழுந்து விபத் துக்குள்ளானதில் அதைச் செலுத் திய விமானி உயிரிழந்தார்.

மேன்ஹாட்டன் நகரில் ஹெலி காப்டர் ஒன்று பறந்துகொண்டிருந்த போது அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதனைக் கீழே இறக்க விமானி முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் நகரின் நடுப் பகுதியில் உள்ள உயர்மாடிக் கட்டடத்தின் மேற்கூரைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அந்த ஹெலிகாப்டர் 10 நிமிடங் களுக்கு முன்புதான் அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்டிருந்தது. கட்ட டத்தின் மேலே ஹெலிகாப்டர் விழுந்தபோது பெரிய நில அதிர்வு ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக அருகில் இருந்த மக்கள் தெரி வித்தனர்.

ஹெலிகாப்டர் விழுந்த கட்ட டத்தின் 29ஆம் மாடியில் பணி புரிந்துகொண்டிருந்த நேதன் ஹட்டன் என்பவர், அப்போது முழுக் கட்டடமும் அசைந்தது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத் திடம் கூறினார்.

“பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது என நினைத்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து அவசர ஒலி கேட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரி உள்ளே வந்து அனைவரையும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

“அனைவரும் தங்கள் உடமை களை எடுத்துக்கொண்டு உடனே படிகளில் கீழே இறங்கினோம். பதற்றம் இல்லை என்றாலும் அனைவரும் பல திசைகளில் இருந்தும் படிகளில் ஒன்றாக கீழே இறங்கியதால் பயமாக இருந்தது,” என்று நேதன் கூறினார்.

ஹெலிகாப்டர் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த விமானி உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அக்கம்பக்க பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து நியூயார்க் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அங் மோ கியோவிலுள்ள புளோக் 224ல் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றம் செய்யப்படும் வேளையில் அது திடீரென தீப்பிழம்பாக வெடித்து அந்த வீட்டையே எரியச் செய்தது. (படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது

படம்: எஸ்டி, மார்க் சியோங்

20 Sep 2019

ஏழாவது நாளாக புகைமூட்ட பிரச்சினை