கேலாங் கடைவீடுகளில் தீ

கேலாங் கடைவீடுகளில் தீ

1 mins read
85754818-c581-4116-a89f-073b598bcd9d
-

கேலாங் வட்டாரத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எண் 67 மற்றும் 69 லோரோங் 14 கேலாங்கிலுள்ள இரண்டு கடைவீடுகளில் தீ மூண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை நேற்றிரவு 8.35 மணிக்குத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. சம்பவ இடத்திற்குப் பன்னிரண்டு அவசர வாகனங்களுடன் 70 தீயணைப்பாளர்கள் விரைந்தனர்.

சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.