மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பழம்பெரும் மன்னர் 'சத்திரபதி சிவாஜி'யின் படத்தைக் காட்டும் விவசாயப் பயிர் நிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு இணையத்தில் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்திலுள்ள நிலங்கா என்ற ஊரிலுள்ள இந்த மாறுபட்ட அஞ்சலியை கூகுள் வரைபடச் சேவையின் செயற்கைக்கோள் மேலிருந்து காட்டுகிறது. ஓவியர் மங்கேஷ் நிபானிக்கர் 2,500 கிலோகிராம் விதைகளைப் பயன்படுத்தி இதனை உருவாக்கியதாக பிசினஸ் இன்சைடர் செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது.
இந்தப் படைப்பின்மீது இணையவாசிகள் பலர் தங்கள் பாராட்டைப் பொழிகின்றனர்.

