உத்தரப் பிரதேசம்; பருவ மழையில் 17 பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்த  பருவ மழையால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்ததாக அகில இந்திய வானொலி நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

கடந்த 36 மணி நேரத்திற்குள் மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் பொதுமக்கள் பலர் மடிந்ததாகக் கூறப்படுகிறது. இடி மின்னலால் மேலும் இருவர் மாண்டதாகவும் அகில இந்திய வானொலி நிலையம் கூறியது. உயிர்ச்சேதம் குறித்து தனது இரங்கலை வெளிப்படுத்திய உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம், மாண்டோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என உறுதி கூறியது.