லாரி விபத்து; தூக்கி வீசப்பட்ட ஆறு ஆடவர்கள்

‘டிஹெச்எல்’ தளவாட நிறுவனத்தின் லாரி ஒன்று மற்றொரு லாரியுடன் மோதியதில் இரண்டாவது லாரியின் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஆறு ஆடவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.70 தானா மேரா கோஸ்ட் ரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் வியாழக்கிழமை காலை 8.05 மணிக்குக் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தைக் காட்டும் காணொளி ‘எஸ்ஜி விஜிலாண்டே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. விபத்துக்குப் பிறகு அந்த மஞ்சள் நிற லாரி நிற்காமல் செல்வதை அந்தக் காணொளி காட்டுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஆடவர்களுக்கு உதவி அளித்து அவர்களை சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விசாரணைக்காக போலிசாருடன் ஒத்துழைத்து வருவதாக  ‘டிஹெச்எல்’ நிறுவனம் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’