அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள புளோக் 720ல் நேற்று பிற்பகல் மூண்ட தீயினால் அந்த புளோக்கின் தரைத்தளம் தீக்கிரையானதுடன் அக்கம்பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக் கும் கரும்புகை பரவியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர் உட்பட எட்டுப் பேர் தீக்காயங்களுக்காகவும் கரும் புகையைச் சுவாசித்ததற்காகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீ மூண்டது குறித்து நேற்று மாலை 4.42 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. பிற்பகல் 3.45 மணியளவில் அது சம்பவ இடத்தை அடைந்தது.
அதிகாரிகள்அங்கு சென்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 4 கடைகள் தீயில் சிக்கின.
அறுபது தீயணைப்பு வீரர் களும் 19 அவசரகால வாகனங்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 10 தண்ணீர்க் குழாய்கள் நீரைப் பீய்ச்சியடித்ததுடன் ஓர் ஆளில்லா தீயணைப்பு வாகனமும் பயன் படுத்தப்பட்டது.
பாதுகாப்புக் கருதி அந்த புளோக்கின் குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். அந்த புளோக்கின் 12வது மாடியில் குடியிருக்கும் 24 வயது மெலானி ஹெங், வெடிப்புச் சத்தம் ஏதும் கேட்கவில்லை என்றார்.
ஒரு சாயக் கடை, 'மைசிகே'யின் மூன்று கடைகள் ஆகியன தீச்சம்பவத்தில் சிக்கிய தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப் பிட்டது.
சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்குமாறு 'எஸ்ஜிசெக்யூர்' செயலியைப் பயன்படுத்தும் 'எம்1', 'ஸ்டார்ஹப்', 'சிங்டெல்' வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
அங் மோ கியோ அவென்யூ 6ல் கடைவீடுகள் தீக்கிரையாகின. படம்: கெல்வின் ஜான் ஃப்ரான்சிஸ்

