தொடக்கப்பள்ளி கல்வித்திட்டத்தில் நிரலிடுதல் ஒரு பிரிவு

தொடக்கப்பள்ளியின் மேல் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நிரலிடுதல் வகுப்புகள் நடத்தப்படும்.மின்னிலக்கப் பொருளியலுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் இது அங்கம் வகிக்கிறது.

தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தனது அமைச்சுக்கான வேலைத்திட்ட கருத்தரங்கில் இதனை அறிவித்திருக்கிறார். சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் அந்தக் கருத்தரங்கு புதன்கிழமை (ஜூலை 10)  நடைபெற்றது.

கல்வியமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த 10 மணி நேர மேம்பாட்டுத் திட்டம் இவ்வாண்டு சில பள்ளிகளில் தொடக்கப்பள்ளி இறுதி தேர்வுக்குப் பிறகு சோதனை செய்யப்படும்.‘கோட் ஃபோர் பன்’ என்ற அந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள்அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மாநாட்டிற்கு வந்திருந்தோரிடம் உரையாடினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். நடுவில் தெற்காசிய ஆய்வுக் கழகத் தலைவர் கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

(இடமிருந்து) தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர்
கோபிநாத் பிள்ளை, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்,
திரு ஜே.ஒய். பிள்ளை, திரு மன்சூர் ஹசான், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

17 Nov 2019

ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது

முதல் தளத்திலிருந்து, பிரிக்கும் பலகை வழியாக ‘கீழ்த்தளம் ஒன்றில் (Basement 1)’ அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

16 Nov 2019

ஷா பிளாசா: வேலையிடத்தில் தவறி விழுந்து இந்திய ஊழியர் மரணம்