இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டுக் கொடியின் சிவப்பு, வெள்ளை நிறங்களையும் நட்சத்திரங்களையும் தாங்கிய நான்கு எம்ஆர்டி ரயில்கள் பொதுமக்களுக்காக சேவை வழங்குகின்றன. 'நமது சிங்கப்பூர்' என்ற இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பொருளைத் தழுவி ரயில்களின் உட்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில்கள் நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க சிங்கப்பூரர்கள் சிலரின் படங்களுடன் காணப்படுகின்றன.
இருநூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையிலும் அலங்காரம் அமைந்துள்ளது. ரயில்கள் அடுத்த மாதம் 18ஆம் தேதிவரை பொதுமக்கள் சேவையில் இருக்கும்.

