இரண்டாவது காலாண்டில் 0.1 விழுக்காடு வளர்ச்சி மட்டுமே

இரண்டாவது காலாண்டில் 0.1 விழுக்காடு வளர்ச்சி மட்டுமே

1 mins read
6c2da32b-2a7c-4c90-84f9-4f468e65d63a
-

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட நல்லதாக இல்லை என்று அண்மை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிங்கப்பூரின் வளர்ச்சி விகிதம் இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 0.1 விழுக்காடு என்று வர்த்தக, தொடர்பு அமைச்சின் முன்னோட்டக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இது, ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த 1.1 விழுக்காட்டைவிட மிகக் குறைவு.

2009ஆம் ஆண்டு முதல் ஆகக் குறைவான வளர்ச்சி விகிதமாக இது உள்ளது. 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகப் பொருளியல் மந்தத்தால் 2009ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் பொருளியல் 1.2 விழுக்காடு சுருங்கியது.

பொருளியலின் அனைத்துத் துறைகளும் மெதுவடைந்திருப்பதை அண்மை புள்ளிவிவரங்கள் காட்டுவதாகப் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காலாண்டு அடிப்படையில் பொருளியல் 3.4 விழுக்காடு குறைந்தது. உற்பத்தித் துறை முதல் காலாண்டைக் காட்டிலும் இரண்டாவது காலாண்டில் 6 விழுக்காடு குறைந்தது. இதே காலக்கட்டத்தில் கட்டுமானத்துறை 7.6 விழுக்காடு குறைந்தது. சேவைத்துறை 1.5 விழுக்காடு குறைந்தது.