அதிகரிக்கும் டெங்கி அபாயம்

அதிகரிக்கும் டெங்கி அபாயம்

1 mins read
fd6e3d5e-806b-46ef-b0d8-51934e554004
-

கடந்த வாரத்தில் 666 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்தில் நிகழும் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்திருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

ஜூலை மாதம் 7ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடையிலான காலக்கட்டத்திற்கான இந்த எண்ணிக்கை, முந்திய வாரத்தைக் காட்டிலும் 73 அதிகமாக உள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவான 637 சம்பவங்களைக் கடந்த வாரத்தின் எண்ணிக்கை விஞ்சியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இவ்வாண்டில் மொத்தம் 7,374 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

"கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அழிக்க உடனடி நடவடிக்கை தேவை," என்று சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.