அதிசய கடல் விலங்குடன் முக்குளிப்பாளரின் படம்

அதிசய கடல் விலங்குடன் முக்குளிப்பாளரின் படம்

1 mins read
ff104ff8-eba2-4c92-9352-27850771295e
-

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் முக்குளிப்புக்குச் சென்றிருந்த ஒருவருக்குக் காத்திருந்தது பேரதிசயம்!

'பேரல் ஜெல்லிஃபிஷ்' என்ற அந்தக் கடல்வாழ் உயிரினத்துடன் அந்த முக்குளிப்பாளர் வடமேற்கு இங்கிலாந்தின் ஃபெல்மவுத் நகருக்கு அருகில் எடுத்த படம் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.

முக்குளிப்பாளராகவும் 'பிபிசி அர்த்' படைப்பாளராகவும் இருந்த லிசி டேலியை அந்தப் பெரிய ஜெல்லிஃபிஷ்ஷுடன் நீரடி ஒளிப்பதிவாளர் டேன் அப்பொட் படமெடுத்திருக்கிறார்.

இந்த இனத்தைச் சேர்ந்த ஜெல்லிஃபிஷ்கள், பிரிட்டனில் ஆகப் பெரிய ஜெல்லிஃபிஷ்களாக உள்ளன. அவரை 90 சென்டிமீட்டர் நீளம் வரையிலும் வளரக்கூடியவை