போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சிங்கப்பூருடன் மலேசியா கலந்துரையாடல்

போதைப்பொருள் புழக்கத்திற்கு அடிமையாவதைக் குற்றமற்ற­தாக்கு­வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சிங்கப்­பூரும் மலேசியாவும் கலந்தாலோ­சித்துள்ளன. இரு நாடுகளும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து­கொண்டு பாதுகாப்பு விவகா­ரங்கள் தொடர்பில் எதிர்­கால ஒத்துழைப்பு பற்றி பேசிய­தாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் நேற்று கூறினார்.

“போதைப்பொருள் புழக்க விவகாரத்தில் இனி நாங்கள் செயல்படவேண்டிய விதம் குறித்து தெரிந்துகொள்ள விருப்பப்பட்டோம். போதைப்­பொருள் உட்கொண்டு சிறைக்கு செல்பவர்கள் அனை­வருமே குற்றவாளிகள் அல்ல என்பதே எங்களுடைய தற்போ­தைய நிலைப்பாடு,” என்றார் திரு முஹைதீன்.

சிங்கப்பூர் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்­திய பிறகு மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி­யாளர்களிடம் திரு முஹைதீன் இவ்வாறு கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமை­யா­வதையும் சொந்த பயன்­ பாட்டுக்கு போதைப்பொருள் வைத்திருப்பதையும் குற்றமற்ற­தாக்கும் பரிந்துரை அமைச்சர்நிலை அளவில் இன்னும் விவாதிக்கப்­படுவதாகக் கூறப்பட்டது.

இருப்பினும், போதைப்பொருள் தொடர்பான கடுமையான குற்றங்­கள் என வரும்போது ஏற்கெனவே நடப்பில் உள்ள தண்டனையை அரசாங்கம் தொடர்ந்து விதிக்கும் என்று திரு முஹைதீன் தெரி­ வித்தார்.

“சிகிச்சைக்காக அவர்கள் அதைப் பயன்படுத்தினால் நாங்கள் அவர்களுக்கு உதவு­வோம். ஆனால் கடுமையான குற்றங்களுக்கு நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்,” என்றார் அவர்.

இரு நாட்டு உள்துறை அமைச்­சர்கள் சந்திப்பின்போது, கட்டாய மரண தண்டனையைப் பொறுத்த­வரை மலேசியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக திரு முஹைதீன் கூறினார்.

எல்லைப் பாதுகாப்பு குறித்தும் இரு அமைச்சர்கள் கலந்தாலோ­ சித்தனர்.

“பலதரப்பட்ட விவகாரங்களைத் தீர்க்க எங்களது நாட்டு எல்லையில் பாதுகாப்புப் படையை அமைப்பது குறித்த தேவையை நான் தனிப்பட்ட முறையில் முன்வைத்­தேன்,” என்றார் திரு முஹைதீன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!