முனையம் ஒன்றுக்கு இடமாற்றம் காண்கிறது ஸ்கூட் விமானச் சேவை

இவ்வாண்டு அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஸ்கூட் விமானச் சேவை, சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டிலிருந்து ஒன்றுக்கு மாறவுள்ளது. இந்த இடமாற்றம் தொடர்பில் சென்ற ஆண்டே நிறுவனம் குறிப்பிட்டிருந்தாலும் தேதி உறுதியாகக் கூறப்படவில்லை.

ஏழு ஸ்கூட் சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் முனையம் ஒன்றிலிருந்து அக்டோபர் 22ஆம் தேதியன்று புறப்படும். அத்துடன் சாங்கி விமானத்துக்கு வரும் ஸ்கூட் விமானங்கள் அனைத்தும் முனையம் ஒன்றில் தரையிறங்கிடும். ஸ்கூட் விமானச் சேவைகளுக்கான புறப்பாடு தொடர்பில் பதிவு செய்துகொள்ளும் இடங்கள் முனையம் ஒன்றின் ஐந்தாம் வரிசை முதல் ஏழாம் வரிசை அமைந்திருக்கும்.

முனையம் மாறினாலும் விமானச் சேவைகளுக்காக குறிப்பிடப்பட்ட நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டது. 

இந்த இடமாற்றத்தால், விரிவுபடுத்தப்பட்ட சுய சேவை வசதிகளைப் பயன்படுத்த மேலும் அதிகமான பயணிகள் ஊக்குவிக்கப்படுவர் என்றும் இதனால் பயணப் புறப்பாடு விரைவாகவும் சுமுகமாகவும் நடந்தேறும் என்றும் ஸ்கூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ லிக் சின் கூறினார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது