ஜப்பான்: 18 ஆண்டுகளில் ஆக மோசமான கொலைச் சம்பவம்

ஜப்பானின் தோக்கியோ நகரிலுள்ள ஓர் உயிரோவிய அரங்கிற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், தமது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகச் சம்பவ இடத்தில்  கூச்சலிட்டார் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் நிகழ்ந்த ஜப்பானின் ஆக மோசமான கொலைச் சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அந்த 41 வயது ஆடவரை போலிசார் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர் கோபத்துடன் கூச்சலிட்டு தமது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறியதுபோல தனக்குக் கேட்டதாகச் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேக நபர், அனைவரைவும் சாகச் சொல்லி கத்திய பிறகு கியோட்டோ அனிமேஷன் நிறுவனத்தின் தலைமையகத்தின் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது. கியோட்டோ அனிமேஷன் நிறுவனத்துடன் அந்தச் சந்தேக நபருக்குத் தொடர்பில்லை என்று போலிசார் உறுதி செய்ததாக என்ஹெச்கே ஐப்பானிய ஊடகம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் 2001ஆம் ஆண்டில் தோக்கியோ நகரில் நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது